Monday, February 18, 2008

கயிற்றுக் கட்டில்


நள்ளிரவு
கயிற்று கட்டில்
வானம் பார்த்து நான்
என்னவள் என்னருகில்

அவள் நிலா காண
அல்லி மலர்ந்து நறுமணம் வீச
என் மனம் கிறுகிறுக்க
நாடி நரம்பு முறுக்கேற

ஊணுடல் உரச
பற்றி கொண்டது தீ
ஊணுடல் மறைய
ஈருயிர் ஒன்றானது

நிலா பெண் நாணி முகம் மூட
முகிலினம் வெட்கத்துடன் சிணுங்க
நட்சத்திர நங்கைகள் கண் சிமிட்ட
வானம் இருளை வாரி இறைத்தது

இக்கணம் கண்ட சூரியனார்
கரிய வானம் தீண்ட
அடி வானம்
செவ்வானம் ஆனது

இது கண்டு என்
கண்மணி கண்விழிக்க
நெகிழ்ந்த தன் நிலை கண்டு
நாணி தலை கவிழ

வேகமாக கை நிலை திருத்த
என் கைகள் தடுக்க
அரங்கேறியது
மிச்சமிருந்த ஆசைகள்

- காட்டாறு

13 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

படிக்கும் போது ஞாபகம் வந்த சினிமா பாடல்கள்
நிலா அது வானத்து மேலே..
சகல கலா வல்லவனில் -ஒரு பாட்டு
இது ஒரு பொன்மாலைப் பொழுது..இப்படி பல.

said...

ஹி...ஹி....ம்ம்ம்ம்

ர்ர்ர்ர்ர்ரொமாண்ட்டிக்...கிக்.....

said...

// வடுவூர் குமார் said...
படிக்கும் போது ஞாபகம் வந்த சினிமா பாடல்கள்
//
ஏதோ ஒரு படத்துல பானுப்ரியா 'கோழி கூவும் நேரம் ஆச்சி தள்ளிப் போ மாமா'ன்னு செம கலக்கல் பாட்டுக்கு ஆடுவாங்க. நண்பன் வந்தப்போ பானுப்ரியா கதை ஓடியது. அப்போ அந்த படம் பார்த்துட்டு வந்து ஆதிகாலத்துல கிறுக்கியதை நினைவூட்டவே... இன்னக்கி பதிவா போட்டாச்சி. :-)

said...

// இரண்டாம் சொக்கன் said...
ஹி...ஹி....ம்ம்ம்ம்

ர்ர்ர்ர்ர்ரொமாண்ட்டிக்...கிக்.....
//

நெம்ப நாள் கேட்டதை இந்த மாதத்திலாவது நிறைவேற்ற வேண்டாமா?

said...

இம்மாதிரி கிறுகிறுக்க வைக்கும் காதல் கவிதைகளை எழுதுவதை மறந்து விடாதீர்கள்....

கடைசியா நீங்க எழுதுன காதல் கவிதைய படிச்ச அன்னிக்குத்தான் கப் வாங்கினேன்...ஹி..ஹி...இன்னிக்கு என்ன வாங்க போறேனோ தெரியல...ஹி..ஹி...

said...

காதலர் தினமா..மாதமா..ஆமாம்..அன்பு மாதம்னு சொன்னிங்கள்ல? சரி சரி..அந்தப்படம் அழகன்..

said...

ரொம்ப பிடிச்சிருக்கு...முகம் சுழிக்க வைக்காத வரிகள் ;))


கலக்கிட்டிங்க அக்கா ;)

said...

புரியுது தாயீ இது காதலர் மாதம் தான்....ஏதோ சங்க இலக்கியப் பாடல் படிக்கிற மாதிரி இருக்குங்கோ
வாலி...புலமைப் பித்தனை மிஞ்சிடுவீங்க போல

said...

பானுப்பிரியா வோடது, அழகன் படப் பாடல்னு நினைக்கறேன்..சூப்பரான டேன்ஸ் ம் பாட்டும்...

எப்படியோ எங்க காட்டாறு தான் அடுத்த லிரிசிஸ்ட்

said...

ஹ்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் அப்பாடி.
(உங்க)
குளிருக்குக் கவிதை இதமா இருக்கே.

ரசித்து ருசித்துப் படித்தேன். காட்டாறு நல்ல இருந்ததுப்பா.

said...

போங்க வெக்கமா இருக்கு :)).

said...

என்னது ஏ படம் மாதிரி இருக்கே !

ஏ என்ன ? ஏ ஸ்கொயர்ட் . பக்கத்திலே போகாதே. அப்பறம்
அதே ஞாபகமா போயிடும்.

இத்தன தூரம் வந்துட்டு, ஆத்துக்குள்ளே போய் கூப்பிடாம‌
வந்தா நன்னாவா இருக்கும். நா உள்ள் போய் ஒரு நிமிஷமா
வந்துடறேன். இங்கேயே இருங்கோ..

(உள்ளேயிருந்து காட்டாறு வருகை)

வாங்கோ பாட்டி ..என்ன விஷேசம் இவ்வளவு தூரம். hello thatha how r u ?

ஏதோ எங்காத்திலே ஒரு சங்கீதக் கச்சேரிக்கு ஏற்பாடு
பண்ணியிருக்கு. நீ பாக்கிறதுக்கு என் பொண்ணு மாதிரி
இருக்கே அதான் கூப்பிட்டு போலாம்னு வந்தேன்.
இந்தா..குங்குவம் எடுத்துக்கோ.
ஆத்துக்கார‌ரையும் அழைச்சுண்டு வா.
ந‌ட‌க்கிற‌ இட‌ம் தெரியுமோல்லியோ?
அதான்.
http://movieraghas.blogspot.com
மேன‌கா பாட்டி
த‌ஞ்சை.
கா: அது ச‌ரி பாட்டி, நான் எழுதின‌ க‌விதை ?
பாட்டி: 1960 லே நான் எழுதாத‌ க‌விதையா? ஆனா
அத‌விட‌ இது சூட்சும‌மா இருக்கு. புரிய‌வாளுக்குத்
தான் புரியும்.

said...

ஆஹா, காட்டாறு அக்கா..!

//ஏதோ ஒரு படத்துல பானுப்ரியா 'கோழி கூவும் நேரம் ஆச்சி தள்ளிப் போ மாமா'ன்னு செம கலக்கல் பாட்டுக்கு ஆடுவாங்க. நண்பன் வந்தப்போ பானுப்ரியா கதை ஓடியது. அப்போ அந்த படம் பார்த்துட்டு வந்து ஆதிகாலத்துல கிறுக்கியதை நினைவூட்டவே... இன்னக்கி பதிவா போட்டாச்சி. :-)//


சரி... கலக்குங்க
அடுத்த கவுஜக்காக நாங்க வெயிட்டீஸ் :))