Sunday, March 09, 2008

நாங்களும் சின்னவங்களாயிட்டோம்

சின்ன புள்ளையா இருக்குறச்சே படிச்ச பாடமெல்லாம் மறக்காம இருக்கனுமின்னு டீச்சர் வீட்டுப்பாடம் கொடுத்தாங்க. முதல் பாட்டு ஞாபகத்துக்கு வர தான் மூளைய கசக்க வேண்டியதா இருந்துச்சி. அப்புறமா எல்லாரும் வரிசை கட்டி நிக்குறாங்க. சரியா செய்திருக்கேனான்னு பார்த்து சொல்லுங்கப்பா. சரியா இல்லைன்னாலும் ‘பார்த்து’ மார்க் போடுங்க. வயசான காலத்துல இப்பிடி முதியோர் கல்வி கற்க வச்சிட்டீங்களே. :-) அசை போட நல்லா தான் இருந்தது.





கண்ணே மணியே முத்தம் தா
கட்டிக்கரும்பே முத்தம் தா
வண்ணக் கிளியே முத்தம் தான்
வாசக் கொழுந்தே முத்தம் தா
மானே தேனே முத்தம் தா
மடியில் வந்து முத்தம் தா




ஆனை ஆனை அழகர் ஆனை
அழகரும் சொக்கரும் ஏறும் ஆனை
கட்டிக்கரும்பை முறிக்கும் ஆனை
காவேரித் தண்ணி கலக்கும் ஆனை

(இதுக்கு மேல தெரியல)



தோசையம்மா தோசை
அம்மா சுட்ட தோசை
அரிசி மாவும் உளுந்த மாவும்
கலந்து சுட்ட தோசை
அப்பாவுக்கு நான்கு
அம்மாவுக்கு மூன்று
அக்காவுக்கு இரண்டு
பாப்பாவுக்கு ஒன்று




கைவீசம்மா கைவீசு
கடைக்குப் போகலாம் கைவீசு
மிட்டாய் வாங்கலாம் கைவீசு
மெதுவாய் தின்னலாம் கைவீசு
பாடும் குயிலே கைவீசு
பைய போகலாம் கைவீசு
பழத்தை வாங்கலாம் கைவீசு
பகிர்ந்தே தின்னலாம் கைவீசு






காக்கா காக்கா கண்ணுக்கு மை கொண்டு வா
குருவி குருவி கொண்டைக்குப் பூ கொண்டு வா
கிளியே கிளியே பிள்ளைக்கு பால் கொண்டு வா
கொக்கே கொக்கே குழந்தைக்கு தேன் கொண்டு வா





பின் குறிப்பு:

இந்த பதிவு பள்ளிக்கூடப் பாட்டுப் போடச் சொன்ன எங்கள் கண்மணியக்காவுக்காக

23 பேர் மறுமொழிந்துள்ளனர்:

said...

பாட்டு நல்லாருந்துச்சு காட்டாறு..95 மார்க் மறந்து போன பாட்டுக்காக 5 குறைச்சுக்கலாம்..

கண்மணி டீச்சர் என்ன மார்க் குடுக்குறாங்கன்னு பார்ப்போம்..

said...

//வயசான காலத்துல இப்பிடி முதியோர் கல்வி கற்க வச்சிட்டீங்களே. :-) //

அப்ப நமக்கு வயசாய்டுச்சின்றீங்க...ம்ம்ம்

said...

மலரக்கா, ரொம்ப பெரிய மனசு தான் உங்களுக்கு. 95 மார்க் தந்த மலரக்காவுக்கு நன்றி. :-)

said...

வயசாச்சா - அப்பிடி எல்லாம் சொல்லப்பிடாது -

ம்ம்
நெரெய பாட்டு தெரியும் - நினைவிற்கு முழுவதும் வர மாட்டேனெங்குதே

ஒரு பாதிப் பாட்டு

பூப்பறி
பூசை பண்ணு
பால் வாங்கு
பாயசம் வை
........
.......
தேவனுக்குப் படை

said...

சொக்கரே, நமக்கு எப்பவும் 24 தான். அதுவும் வயசானது தானே? ;-)

said...

வாங்க சீனா. ரொம்ப நாள் இந்தப் பக்கம் ஆளைக் காணோம்? என்னாச்சு?

கண்மணி ஆரம்பிச்சி உட்டாலும் உட்டாக... இன்னக்கி முழுசும் சின்ன புள்ளைக பாட்டு தான் போங்க. வீட்டுல உள்ளவக கதி தான் அதோ கதி. :-)

said...

\காட்டாறு said...
மலரக்கா, ரொம்ப பெரிய மனசு தான் உங்களுக்கு. 95 மார்க் தந்த மலரக்காவுக்கு நன்றி. :-)\\

காட்டாறு அக்கா எம்புட்டு செலவு பண்ணிங்க...! ;)))

said...

அந்த யானை பாட்டும், தோசை பாட்டும் ரொம்ப பிடித்தமானவை.
இதெல்லாம் யாராவது பெரியவங்க சொல்லிகுடுப்பாங்க இல்ல..யாரும் சொல்லித்தராமலேயே நாமா கத்துக்கற சில பாட்டு இருக்கு..

அதோ பாரு காக்கா
கடையில விக்குது சீக்கா
பொண்ணு வரா சோக்கா
எழுந்து போடா மூக்கா...

ம்ம்...
அதோ பாரு காரு
காருக்குள்ள யாரு
நம்ம மாமா நேரு
நேரு என்ன சொன்னாரு
நல்லா படிக்க சொன்னாரு...

இது மாதிரி..!!

said...

ஸேம் ப்ளட்....ஹி..ஹி..ம்ம்ம்ம்

said...

நல்லா இருக்கு காட்டாறு..
எனக்கு இன்னமும் ஒன்னு கூட நினைவுக்கு வரல.. படிச்சு காத்தோட விட்டாச்சு...வய்சாகி மறதி அதிகமாகி போச்சா இருக்க்கும்.
ஆனா மங்கை ஒரு ஐடியா குடுத்துருக்காங்க.. சீக்கிரமே போடறேன் பதிவு..

said...

இதோ ஒரு பாட்டி(என் பாட்டி)க்
காலத்துப் பாட்டு.


கொழு கொழு கன்றே..
கன்றின் தாயே
தாயை மேய்க்கும் இடையா
இடையன் கைக்கோலே

கோலிழுக்கும் புல்லே
புல்லுத் தின்னு குதிரையே''
இப்படி ஒரு பூச்சி எல்லாத்தையும் தன் பேரென்னனு கேட்டதாம்.
கடைசியாக் குதிரைக் கிட்டக் கேட்டதும்
அது ஹீ ஈஈஇனு கத்தித்தாம்.
உடனே ஈ தன் பேரைத் தெரிந்த கொண்ட சந்தோஷத்தில் பறந்தே போச்சாம்.:)

said...

இன்னோண்ணு பலூன் பாட்டு.

பலூனை பாலூன்னு பாடணும்.

பலூனம்மா பாலூன்
கலர்க் கலரா இருக்குது..
கரடி போல ஒண்ணு
காக்கா போல ஒண்ணு

காத்தாடி போல ஒண்ணு
கத்திரி போல ஒண்ணு

காசு போட்டு வாங்கலாம்கூச்சல் போட்டு ஓடலாம்.;)

டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா
கோபம் கொள்ளாதே
அப்பா வர நேர மாச்சு வம்பு பண்ணாதே;)

said...

நன்றி... நன்றி... நன்றி!! பயன் படுத்திக் கொள்கிறேன்...

வள்ளிப் பாட்டி உங்களுக்கும் ஒரு சிறப்பு நன்றி :).

said...

அய்யோ அய்யோ தங்கச்சி நீயி இப்படியா பண்ணுவ;(
நெஜமா நல்லவன் இந்தப் பாட்டெல்லாம் முன்னாடியே எழுதிட்டாரே.மொத பாட்டும் வல்லியம்மா பாட்டும் தான் ஓகே.
நீயி ஜஸ்ட் பாஸ் தான்.[உண்மையில் காப்பியடிச்சதால ஃபெயில் பண்ணனும் ஆனா தங்கச்சிய ஃபெயிலாக்கா இந்த அக்கா மனசு கேக்கலையே......[சிவாஜி எபக்ட்ல படிக்கவும்]

said...

சீனா சார் இப்படி காட்டாறு பாசமலர் பதிவுல பாடினா எப்படி மார்க் போட முடியும். என் பதிவில் சொல்லுங்க இல்லை தனிப் பதிவு போடுங்க
வல்ல்லியம்மா உங்களையும்தான்

said...

புகைப்படத்துடன் பாடல்.... நல்லாயிருக்கு,ங்க!

said...

::))

நீங்க குழந்தைங்களுக்காக புதுசா எழுதின கவிதைய தருவீங்கன்னு எதிர்பார்த்தேன் .... :))

சென்ஷி

said...

சூப்பர்.... உண்மையிலேயே எல்லோரும் தாத்தாவ நினைச்சு வருத்தப்படறத விட அவரோட மனசை நினைச்சு சந்தோஷப்படுங்க :))

சென்ஷி

said...

// கோபிநாத் said...
காட்டாறு அக்கா எம்புட்டு செலவு பண்ணிங்க...! ;)))
//

அதெல்லாம் வெளில சொல்லப் படாது ராசாத்தீ. :-)

said...

// சந்தனமுல்லை said...
அந்த யானை பாட்டும், தோசை பாட்டும் ரொம்ப பிடித்தமானவை.
இதெல்லாம் யாராவது பெரியவங்க சொல்லிகுடுப்பாங்க இல்ல..யாரும் சொல்லித்தராமலேயே நாமா கத்துக்கற சில பாட்டு இருக்கு..
//

முல்லை வாங்க வாங்க. ரொம்ப நாள் கழிச்சி வந்து பரிசும் தந்துட்டீங்க. அதை அப்படியே கண்மணிட்ட கொடுப்பது தான் நியாயம். உங்க சார்பா கொடுத்துடுறேன்.

said...

// கயல்விழி முத்துலெட்சுமி said...
நல்லா இருக்கு காட்டாறு..
எனக்கு இன்னமும் ஒன்னு கூட நினைவுக்கு வரல.. படிச்சு காத்தோட விட்டாச்சு...வய்சாகி மறதி அதிகமாகி போச்சா இருக்க்கும்.
ஆனா மங்கை ஒரு ஐடியா குடுத்துருக்காங்க.. சீக்கிரமே போடறேன் பதிவு..

//

முத்தக்கா, மங்கைக்கு ஐடியா கொடுக்க நேரம் இருக்குதா? நாசாவில் வேலை வாங்கி இந்நேரம் ஷட்டில் ஏறிட்டாங்கன்னு நெனச்சேன். ;-)

said...

// வல்லிசிம்ஹன் said...
இதோ ஒரு பாட்டி(என் பாட்டி)க்
காலத்துப் பாட்டு.
//

வல்லிம்மா, எனக்கு கூட இந்தப் பாட்டு தெரியும். ஹி ஹி ஹி... மறந்து போனதை நியாபகப் படுத்திட்டீங்க. நன்றி!

Anonymous said...

"டான்ஸ் பாப்பா, டான்ஸ் பாப்பா " முழு பாடலையும் தாருங்கள்.